News September 27, 2025

சீமான் வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்

image

2018-ம் சென்னை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சீமான் தரப்பில் சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டதாக வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கோர்ட் வழக்கை ரத்து செய்தது.

Similar News

News September 27, 2025

இளநீரில் இதை கலந்தால் ஊட்டச்சத்து இரட்டிப்பாகும்!

image

உடலுக்கு ஆரோக்கியமான இளநீருடன், இந்த 5 பொருள்களை கலந்து குடித்தால் ஊட்டச்சத்து இரட்டிப்பாகும். * இளநீரில் சியா விதைகளை கலந்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும் *தேன் சேர்த்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் * புதினா கலந்தால் புத்துணர்ச்சி அதிகரிக்கும் *எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் PH அளவு சமநிலைப்படும்* கருப்பு உப்பை சேர்த்து குடித்து வந்தால் செரிமான கோளாறு சரியாகும்.

News September 27, 2025

திமுகவால் காங்கிரஸுக்கு ஆபத்து: நயினார் நாகேந்திரன்

image

கல்வி நிகழ்ச்சியில் நடிகர்கள் மூலம் திமுக அரசு விளம்பரம் தேடுகிறது என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும் திமுகவை நம்பி காங்கிரஸ் கட்சி இருந்தால் இதைவிட மோசமான நிலைக்கு அக்கட்சி தள்ளப்படும் எனவும், காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரை திமுக தங்கள் கட்சிக்கு இழுத்து வருகிறதாகவும் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு 2026-ல் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் கூறினார்.

News September 27, 2025

மஞ்சள் நிலவாக ஒளிரும் மாளவிகா மோகனன்

image

தங்கப்பூவை போல மின்னும் மாளவிகா மோகனனின் சமீபத்திய போட்டோ ஷூட் கண்களை கவர்ந்து இழுக்கின்றன. கேரள பெண்களுக்கே உரிய இயற்கை அழகுடன் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார் மாளவிகா மோகனன். திறமையான நடிப்பால் மலையாளத்தை தாண்டி தமிழிலும் தனி இடம் பிடித்தவர். கண்களால் இதயத்தை கொத்தும் மாளவிகாவின் போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்..

error: Content is protected !!