News September 27, 2025

சூப்பர் ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் டார்கெட்

image

இந்தியா – இலங்கை இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதல் பந்திலேயே நிசங்காவின் விக்கெட்டை பறிகொடுத்தது. 5-வது பந்தில் 2 வது விக்கெட்டையும் இலங்கை இழந்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவை. சூப்பர் ஓவரில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார்.

Similar News

News September 27, 2025

சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி: EPS

image

ஓவ்வொரு தேர்தலுக்கும் ஓவ்வொரு வேடம் போடுவார் செந்தில் பாலாஜி என கரூர் பரப்புரையில் EPS விமர்சித்துள்ளார். அவர் சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் என கூறிய EPS, அத்தனையும் கிரிமினல் எண்ணம் எனவும் சாடியுள்ளார். தேர்தலின் போது ஓட்டுப்போட்ட மக்களுக்கு, போலி வெள்ளிக் கொலுசுகளை கொடுத்து செந்தில் பாலாஜி ஏமாற்றியதாகவும், தேர்தல் முடியும் வரை மட்டுமே திமுகவில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 27, 2025

BOSCH நிறுவனத்தில் இருந்து 13,000 பேர் நீக்கம்

image

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான BOSCH-ல் இருந்து 13,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே AI-ன் அசுர வளர்ச்சியால் ஐடி நிறுவனங்களிலும் வேலை நீக்கம் நடைபெற்று வருகிறது.

News September 27, 2025

இயக்குநராக களமிறங்கிய சூர்யாவின் மகள்

image

நடிகர் சூர்யாவின் மகள் தியா ‘லீடிங் லைட்’ என்ற ஆவணக் குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த ஆவணக் குறும்படம், பாலிவுட் லைட்வுமன்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது. ‘லீடிங் லைட்’ படத்தை சூரியாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. ஆஸ்கர் போட்டிக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (செப் 26) முதல் அக்டோபர் 2 வரை இப்படம் திரையிடப்படுகிறது.

error: Content is protected !!