News April 13, 2024
மும்பையில் குடியேறிய பூஜா ஹெக்டே

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான அவர், ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில், அவர் மும்பையில் 4,000 சதுர அடியில் புதிய வீடு வாங்கி குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்கரையை பார்த்தபடி கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பின் மதிப்பு ₹45 கோடி எனக் கூறப்படுகிறது.
Similar News
News November 9, 2025
நவம்பர் 9: வரலாற்றில் இன்று

*1896-நாதசுவரக் கலைஞர் பி.எஸ்.வீருசாமி பிள்ளை பிறந்தநாள். *1959-வீணைக் கலைஞர் ஈ.காயத்ரி பிறந்தநாள். *1965-நடிகர் வேணு அரவிந்த் பிறந்தநாள். *1988-தேங்காய் சீனிவாசன் மறைந்த நாள். *1998-பி.எஸ்.வீரப்பா மறைந்த நாள். *2006-எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைந்த நாள். *2024-நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த நாள்.
News November 9, 2025
பூதத்தின் பிடியில் தமிழ் சினிமா: கஸ்தூரி

தமிழ் திரையுலகம் ஒரு பூதத்தின் பிடியில் இருப்பதாக கஸ்தூரி விமர்சித்துள்ளார். பாஜக மாநில கலை & கலாசார பொதுக்குழுவில் பேசிய அவர், தமிழ் திரையுலகம் ஒரு சாராரிடம் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார். அது மொத்த ஊரிடம் இருந்தால் மட்டுமே அதன் வளர்ச்சி நன்றாக பரிணமிக்கும் என்றும், திரைத்துறையை விடுவிப்பதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் கஸ்தூரி பேசியுள்ளார்.
News November 9, 2025
திமுகவினர் ஒப்பாரி வைக்கின்றனர்: RB உதயகுமார்

திமுகவை எதிர்ப்பில் அதிமுக ஒருபோதும் பின்வாங்கியதில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். திமுகவில் தற்போது அமைச்சராக இருக்கும் பலர் EX-அதிமுகவினர் என்றும், KKSSR, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி என திமுகவுக்கு சென்றவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதாகவும் அவர் பேசியுள்ளார். இதனால், ஏற்கெனவே திமுகவில் இருப்பவர்கள், தங்களுக்கு பதவி கிடைப்பதில்லை என ஒப்பாரி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


