News September 27, 2025

நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் குறைவு !

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (செப். 26) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் நாளைய பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களாக விலை உயர்வாக காணப்பட்டது. தற்போது, புரட்டாசி மாதம் என்பதால் முட்டையின் நுகர்வு குறைந்துள்ளது. இதன் காரணமாகவே, முட்டையின் விலை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

நாமக்கல் வருகை தந்த அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு!

image

நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை புரிந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியனுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News November 1, 2025

நாமக்கல்: கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

image

1. 12வது முடித்தவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – https://nabfins.org/ 2. இந்தியன் ரயில்வேயில் 2569 வேலை- https://www.rrbapply.gov.in/ 3.10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் வேலை – https://www.tnrd.tn.gov.in/ 4.மத்திய அரசு பெல் நிறுவனத்தில் வேலை – https://bel-india.in/ 5. ONGC நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் வேலை – https://ongcapprentices.ongc.co.in/. (ஷேர் பண்ணுங்க)

News November 1, 2025

அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர் !

image

நாமக்கல் மாவட்டத்தில், 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, முதலமைச்சரின் ‘தாயுமானவர் திட்டம்’ மூலம் நவம்பர் (2025) மாதத்திற்கான பொது விநியோகத் திட்டப் பொருட்கள் (ரேஷன் பொருட்கள்) அவர்களின் இருப்பிடத்திற்கே வந்து வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!