News September 27, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.26) இரவு 10 மணி முதல் இன்று(செப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News January 10, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி திருநங்கையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருது, ரூ.1 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 10, 2026

தஞ்சை: 3 பேருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

image

திருவலஞ்சுழி பைபாஸ் அருகே கடந்த 2024ம் ஆண்டு இருசக்கர வாகனம் பழுதடைந்து நின்ற நபரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளான நந்தகுமார், சிவகுமார், சரண் ஆகிய மூவருக்கும் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News January 10, 2026

தஞ்சையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்!

image

தஞ்சாவூரில் அமைந்துள்ள மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரியில் இன்று (ஜனவரி 10) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8 மணியளவில் தனியார் துறையை சார்ந்த பல நிறுவனங்கள் வருகை புரிந்து நேர்காணல் மூலமாக நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வேலை தேடும் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!