News September 27, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News September 27, 2025

BOSCH நிறுவனத்தில் இருந்து 13,000 பேர் நீக்கம்

image

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான BOSCH-ல் இருந்து 13,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே AI-ன் அசுர வளர்ச்சியால் ஐடி நிறுவனங்களிலும் வேலை நீக்கம் நடைபெற்று வருகிறது.

News September 27, 2025

இயக்குநராக களமிறங்கிய சூர்யாவின் மகள்

image

நடிகர் சூர்யாவின் மகள் தியா ‘லீடிங் லைட்’ என்ற ஆவணக் குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த ஆவணக் குறும்படம், பாலிவுட் லைட்வுமன்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது. ‘லீடிங் லைட்’ படத்தை சூரியாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. ஆஸ்கர் போட்டிக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (செப் 26) முதல் அக்டோபர் 2 வரை இப்படம் திரையிடப்படுகிறது.

News September 27, 2025

முதலமைச்சர் பாதுகாப்புக்காக 110 AI கேமராக்கள்

image

சென்னையில் உள்ள CM ஸ்டாலின் வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 110 AI கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் கமிஷனர் ஆபிஸில் அமைக்கப்படுகிறது. சந்தேகத்துக்குரிய நபர்கள் CM வீட்டருகே சென்றாலோ, அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ உடனடியாக காவல்துறைக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி சென்றுவிடுமாம்.

error: Content is protected !!