News September 27, 2025

திருச்சி: திட்ட முகாமில் 2711 மனுக்கள் பதிவு

image

அரசின் சேவைகள், திட்டங்களை மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் திருச்சி மாவட்டத்தில் இன்று (செப்.26) 6 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி மண்டலம் இரண்டில் 878, மண்டலம் மூன்றில் 394, மண்ணச்சநல்லூரில் 527 திருவெறும்பூரில் 255, அந்தநல்லூரில் 475, மணிகண்டத்தில் 182 என மாவட்டம் முழுவதும் 2711 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 14, 2026

திருச்சி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் வரும் 16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL3A, FL3AA & FL11 ஆகியவை மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

திருச்சி: எஸ்.பி தலைமையில் குற்றத்தடுப்பு கூட்டம்

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தலைமையில் நேற்று (ஜன.13) மாதாந்தர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பங்கேற்று குற்ற வழக்கின் நிலுவை தன்மைகள் மற்றும் நிலைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் எஸ்.பி காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

error: Content is protected !!