News September 27, 2025
Fake வெப்சைட்டுகளை கண்டுபிடிக்க..

➱https:// உடன் தொடங்கி, பெயரில் எழுத்துப் பிழைகள் இருந்தால், போலியானதாக இருக்கலாம் ➱Domain-ஐ சரிபார்க்கவும். அண்மையில் தொடங்கப்பட்டதாக இருந்தால், போலியானதாக இருக்க வாய்ப்புகள் உள்ளன ➱ஒரு பக்கத்திற்குள் சென்றவுடன் அது வேறொரு பக்கத்திற்கு சென்றால், அது போலியானதாக இருக்கலாம் ➱அரசு இணையதளம் எனில், gov.in என கடைசியில் இருக்கும் ➱போலி தளங்களை பார்த்தால், 1930 என்ற எண்ணிற்கு தகவல் கொடுங்கள். SHARE.
Similar News
News January 13, 2026
BREAKING: சென்னை டூ தென்காசி இன்று சிறப்பு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றன. இதில் 8 ஏசி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. தாம்பரம் , செங்கல்பட்டு , விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி , கல்லிடை, அம்பை , பாவூர்சத்திரம் வழியாக இந்த சிறப்பு ரயில் தென்காசியை சென்றடைகிறது. SHARE பண்ணுங்க..
News January 13, 2026
ஜீவனாம்சமாக ₹15,000 கோடி கொடுக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஜீவனாம்சமாக ₹15,000 கோடியை அளிக்கவுள்ளார். கலிபோர்னிய நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்திய தொழிலதிபர் ஒருவரின் Costliest விவாகரத்து என கூறப்படும் இது, உலகளவில் 4-வது மிக காஸ்ட்லியான விவாகரத்தாம். 1993-ல் பரிமளா ஸ்ரீனிவாசனை திருமணம் செய்த ஸ்ரீதர் வேம்புக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 13, 2026
சற்றுமுன்: ஒரு கிலோ விலை ₹2,92,000

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று, ஒருகிராம் வெள்ளியின் விலை ₹5 உயர்ந்து ₹292-க்கும், கிலோ வெள்ளி ₹5,000 உயர்ந்து ₹2,92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹35,000 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையின் எதிரொலியால், வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


