News September 27, 2025
சூர்யகுமாருக்கு 30% அபராதம்.. BCCI மேல்முறையீடு

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றதை அடுத்து, இந்த வெற்றியை இந்திய பாதுகாப்பு படைகளுக்கும், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமர்பிப்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்து இருந்தார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறி, சூர்யகுமாருக்கு போட்டிக் கட்டணத்தில் 30% ICC அபராதம் விதித்தது. ICC-ன் இந்த முடிவை எதிர்த்து BCCI மேல்முறையீடு செய்துள்ளது.
Similar News
News September 27, 2025
நிலவுக்கு துருப்பிடித்துவிட்டதா? வியக்க வைக்கும் விஞ்ஞானிகள்

பூமியிலிருந்து உருவாகும் ஆக்ஸிஜன் துகள்களால் சந்திரன் துருப்பிடித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹெமாடைட் என்னும் இரும்பு ஆக்சைடின் படிவம் நிலவில் படித்துள்ளதையே துருப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. நிலவு எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படுவதாக நீண்ட காலமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது அதில் துருப்பிடித்துள்ளது, ஆச்சரியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நிலாவோட கலர் மாறுமா?
News September 27, 2025
உடற்பயிற்சிக்கு பின் வெந்நீரில் குளித்தால் சிக்கலா?

உடற்பயிற்சிக்கு பிறகு சூடான நீரில் குளித்தால் உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும்போது உடலானது சூடாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் இருக்கும். மேலும் இரத்த நாளங்களானது உடலை குளிர்விக்க அகலமாக விரிவடையும். இத்தகைய சூழ்நிலையில், சூடான நீரில் குளித்தால் உடலானது மேலும் சூடாகும். இதன் விளைவாக லேசான தலைச் சுற்றல் அல்லது மயக்கம் கூட வரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
News September 27, 2025
திரையரங்கில் IND Vs PAK போட்டியை பாக்க ரெடியா?

இந்தியா – இலங்கை இடையேயான நேற்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் நாளை நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பெரும் எதிர்பார்பு எழுந்துள்ளது. இதனிடையே PVR Inox-ல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேரலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் போட்டி நேரலை செய்யப்படுகிறது.