News September 26, 2025

பிரபல பாடகர் மரணம்… சொன்னது பலித்தது

image

அசாமின் ஐகானான பாடகர் <<17761763>>ஜுபின் கார்க்<<>>, கடந்த வாரம் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் கடைசியாக பேசிய பாட்காஸ்ட் வைரலாகிறது. அதில் அவர், ‘நான் இறந்தால், அசாமில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்’ என்கிறார். அவர் சொன்னபடியே, 3 நாள் அரசுமுறை துக்கத்துக்கு பின் அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடந்தது. மக்களின் குரலாக ஒலித்த மகா கலைஞனுக்கு பல லட்சம் மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Similar News

News September 27, 2025

திரையரங்கில் IND Vs PAK போட்டியை பாக்க ரெடியா?

image

இந்தியா – இலங்கை இடையேயான நேற்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் நாளை நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பெரும் எதிர்பார்பு எழுந்துள்ளது. இதனிடையே PVR Inox-ல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேரலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் போட்டி நேரலை செய்யப்படுகிறது.

News September 27, 2025

பில் கேட்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

image

*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *நான் கடினமாக உழைக்கிறேன் ஏனெனில் நான் என் வேலையை நேசிக்கிறேன். *ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் பணத்தினால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. *என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை.

News September 27, 2025

கார்களை விற்று தள்ளும் மாருதி

image

GST வரி குறைப்புக்கு பிறகு கிட்டதட்ட 80,000 கார்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்று தள்ளியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் 80,000-க்கும் மேற்பட்டோர் கார்களை பற்றி விசாரித்து செல்வதாகவும் கூறப்படுகிறது. மாருதி கார்களை வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குவதற்கு பின்னால் அவர்களின் யுக்தி ஒன்றும் உள்ளது. கார்களை அந்நிறுவனம் வெறும் ₹1,999க்கு EMI-யில் வழங்குவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

error: Content is protected !!