News September 26, 2025

டிரம்புக்கு தாளம் போடும் பாகிஸ்தான்

image

இந்தியா – பாக்., போரை தான் நிறுத்தியதாக தம்பட்டம் அடித்துக் கொண்ட டிரம்ப்பின் கருத்துக்கு வலுச் சேர்க்கும் வேலையை பாகிஸ்தான் செய்துள்ளது. பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பும் ராணுவ தளபதி ஆசிம் முனீரும் டிரம்ப்பை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் செய்யவும், மேற்கு ஆசியாவில் அமைதி திரும்பவும் டிரம்ப் உதவினார் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 27, 2025

திரையரங்கில் IND Vs PAK போட்டியை பாக்க ரெடியா?

image

இந்தியா – இலங்கை இடையேயான நேற்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் நாளை நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பெரும் எதிர்பார்பு எழுந்துள்ளது. இதனிடையே PVR Inox-ல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேரலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் போட்டி நேரலை செய்யப்படுகிறது.

News September 27, 2025

பில் கேட்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

image

*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *நான் கடினமாக உழைக்கிறேன் ஏனெனில் நான் என் வேலையை நேசிக்கிறேன். *ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் பணத்தினால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. *என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை.

News September 27, 2025

கார்களை விற்று தள்ளும் மாருதி

image

GST வரி குறைப்புக்கு பிறகு கிட்டதட்ட 80,000 கார்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்று தள்ளியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் 80,000-க்கும் மேற்பட்டோர் கார்களை பற்றி விசாரித்து செல்வதாகவும் கூறப்படுகிறது. மாருதி கார்களை வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குவதற்கு பின்னால் அவர்களின் யுக்தி ஒன்றும் உள்ளது. கார்களை அந்நிறுவனம் வெறும் ₹1,999க்கு EMI-யில் வழங்குவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

error: Content is protected !!