News September 26, 2025
BREAKING: மீண்டும் ஒன்றாக சேர்ந்தனர்.. அரசியல் திருப்பம்

OPS, TTV இருவரும் நீண்ட காலங்களுக்கு பிறகு சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. சென்னை நந்தனத்தில் விஐடி பல்கலை., குடும்பத்தின் திருமண விழாவில் பங்கேற்ற இருவரும், ஒரே சோபாவில் அமர்ந்து சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தினர். NDA கூட்டணியிலிருந்து இருவரும் விலகிய பிறகு மீண்டும் கூட்டணிக்குள் இணைய பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த சந்திப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
Similar News
News September 27, 2025
பில் கேட்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *நான் கடினமாக உழைக்கிறேன் ஏனெனில் நான் என் வேலையை நேசிக்கிறேன். *ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் பணத்தினால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. *என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை.
News September 27, 2025
கார்களை விற்று தள்ளும் மாருதி

GST வரி குறைப்புக்கு பிறகு கிட்டதட்ட 80,000 கார்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்று தள்ளியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் 80,000-க்கும் மேற்பட்டோர் கார்களை பற்றி விசாரித்து செல்வதாகவும் கூறப்படுகிறது. மாருதி கார்களை வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குவதற்கு பின்னால் அவர்களின் யுக்தி ஒன்றும் உள்ளது. கார்களை அந்நிறுவனம் வெறும் ₹1,999க்கு EMI-யில் வழங்குவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
News September 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 471
▶குறள்:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
▶பொருள்: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.