News September 26, 2025
அற்புதமான ஐஸ் நகரம் PHOTOS

சீனா ஒவ்வொரு குளிர்காலத்திலும், தனது ‘ஐஸ் அண்ட் ஸ்னோ வேர்ல்டை’ சீசன் முடிவதற்குள் சுமார் 2 மாதங்களுக்கு திறக்கிறது. இந்த ஐஸ் பூங்காவை உருவாக்க, சோங்குவா நதியிலிருந்து சுமார் 3,00,000 கன மீட்டர் பனிக்கட்டி வெட்டி எடுக்கப்படுகிறது. இது, சுமார் $100 மில்லியன் செலவில் உருவாக்கப்படுகிறது. கண்களை கவரும் இந்த ஐஸ் நகரத்தின் புகைப்படங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
Similar News
News September 27, 2025
கார்களை விற்று தள்ளும் மாருதி

GST வரி குறைப்புக்கு பிறகு கிட்டதட்ட 80,000 கார்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்று தள்ளியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் 80,000-க்கும் மேற்பட்டோர் கார்களை பற்றி விசாரித்து செல்வதாகவும் கூறப்படுகிறது. மாருதி கார்களை வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குவதற்கு பின்னால் அவர்களின் யுக்தி ஒன்றும் உள்ளது. கார்களை அந்நிறுவனம் வெறும் ₹1,999க்கு EMI-யில் வழங்குவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
News September 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 471
▶குறள்:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
▶பொருள்: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.
News September 27, 2025
விஜய் பேச்சுக்கு வைகோ வரவேற்பு

1.37லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இலங்கை தமிழர்களுக்காக விஜய் உட்பட யார் குரல் கொடுத்தாலும், அதை மனதார வரவேற்பதாக சென்னையில் அளித்த பேட்டியில் வைகோ கூறியுள்ளார்.