News September 26, 2025

வரலாறு படைத்த அபிஷேக் சர்மா

image

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்தார். T20 ஆசிய கோப்பை தொடரில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தானின் ரிஸ்வான் சாதனையை (281 ரன்) அவர் முறியடித்தார். மேலும், இந்தியாவுக்காக ஒரே தொடரில் 300+ ரன்கள் குவித்த வீரர்(309*) என்ற சாதனையும் படைத்தார். மேலும், குறைந்த பந்துகளில் 50 ரன் எடுத்த (6 முறை) ரோகித்தின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

Similar News

News January 17, 2026

கடலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹4,000 மாற்றம்

image

தங்கம் சவரனுக்கு ₹400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலையும் இன்று(ஜன.17) கிலோவுக்கு ₹4,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹310-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹3,10,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ்(28) 2 டாலர்கள் குறைந்துள்ள போதிலும், இந்திய சந்தையில் வெள்ளி விலை உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 17, 2026

விஜய்க்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? காங்., ரகசிய சர்வே!

image

விஜய்க்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என காங்., ரகசிய சர்வே எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், 100-ல் 61 பேர் தவெகவிற்கும், 23 பேர் திமுக கூட்டணிக்கும், 15 பேர் அதிமுக கூட்டணிக்கும் வாக்களித்திருக்கிறார்களாம். மேலும், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்த பின் மீண்டும் சர்வே எடுத்தபோது, 71% வாக்குகள் தவெகவுக்கு வந்திருக்கிறதாம். காங்., கூட்டணி நிலைப்பாட்டில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா?

error: Content is protected !!