News September 26, 2025

சென்னை வருகிறார் குடியரசுத் துணை தலைவர்

image

குடியரசுத் துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கடந்த 12ம் தேதி பதவியேற்றார். அதன் பிறகு முதன் முதலில் வரும் 4-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். விமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு அரசு சார்பிலும், தமிழ்நாடு பாஜக சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சார்பிலும் குடியரசுத் துணை தலைவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 5ம் தேதி அவர் கோவையில் தனது வீட்டிற்கு செல்கிறார்.

Similar News

News January 14, 2026

சென்னை: கூவம் ஆற்றில் குதித்த இளம்பெண் சடலமாக மீட்பு!

image

சென்னை அண்ணா சதுக்கம், நேப்பியர் பாலத்தில் இருந்து நேற்று இளம்பெண் ஒருவர் திடீரென கூவம் ஆற்றில் குதித்தார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் யுவஶ்ரீ (25) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் பெண்ணின் உடல் இன்று கரையொதுங்கியது. மேலும், உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 14, 2026

சென்னை: UPI error-ஆ? பேங்கிடம் இருந்து ரூ.100 பெறலாம்!

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 14, 2026

சென்னையில் சம்பளப் பிரச்னையா?

image

சென்னை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <>இந்த லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

error: Content is protected !!