News September 26, 2025
லிஃப்டில் கண்ணாடிகள் இருப்பது ஏன் தெரியுமா?

➤லிஃப்ட் போன்ற சின்ன இடங்களில் இருப்பதால் யாரும் பதற்றமடையாமல் இருக்க இவ்வாறு கண்ணாடிகள் வைக்கப்படுகின்றன ➤லிஃப்டில் பயணிப்பவரின் கவனத்தை கண்ணாடிகள் திசைதிருப்பும் என்பதால் லிஃப்டுக்குள் அதிக நேரம் இருப்பது போல தெரியாது ➤கண்ணாடியின் மூலம் பின்னால் இருப்பவர்களையும் பார்க்கமுடியும் என்பதால், பாதுகாப்பான உணர்வை உருவாக்கும். 1% பேருக்கு மட்டுமே தெரிந்த தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News January 11, 2026
அடுத்த 45 நாள்களுக்கு நாடு தழுவிய பிரசாரம்

100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி, நாடு தழுவிய 45 நாள் பிரசாரத்தை காங்., முன்னெடுத்துள்ளது. இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும், நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், பிப். 7 -15 வரை மாநில அளவிலும், பிப்.16 – 25 வரை பெரிய பேரணிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
News January 11, 2026
பெரியார் பொன்மொழிகள்

*முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். *ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். *ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள். *துறவிகள் மோட்சத்திற்கு போக வேண்டும் என்று பாடுபடுகின்றார்களே தவிர, சமூகத்தில் மனித மேம்பாட்டுக்காக பாடுபடுவதில்லை.
News January 11, 2026
சீனா, வங்கதேசத்திற்கு செக் வைக்க புதிய கடற்படை தளம்!

மே.வங்கத்தின் ஹால்டியா துறைமுகத்தில் புதிய கடற்படை தளத்தை இந்திய கடற்படை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு சிறிய அளவிலான தாக்குதல் கப்பல்கள், டிரோன்களுடன் 100 வீரர்கள் நிலைநிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ஆதிக்கத்திற்கு செக் வைக்கும் வகையிலும், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவலை தடுக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.


