News September 26, 2025
தொடர் விடுமுறை: 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கம்

காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை நாள்களை முன்னிட்டு சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இன்று முதல் செப்.30 வரை 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல், அக்.4, 5-ல் சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாகவும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் 3 நாள்களுக்கு 93,138 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 16, 2026
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவின் கை ஓங்கியதா?

மும்பை, புனே உள்பட மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை மாநகராட்சியில் (BMC) பாஜக தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி 88 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. தாக்கரே சகோதரர்கள் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். மும்பை மட்டுமல்லாமல் மீதமுள்ள 28 மாநகராட்சிகளிலும், ‘மஹாயுதி’ கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.
News January 16, 2026
வெள்ளி விலை இன்று ₹4,000 குறைந்தது

தங்கம் விலை இன்று(ஜன.16) <<18869879>>சவரனுக்கு ₹480<<>> குறைந்தது போல், வெள்ளியும் கிலோவுக்கு ₹4,000 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் 1 கிராம் வெள்ளி ₹306-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹3,06,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளதால், இந்திய சந்தையில் குறையத் தொடங்கியுள்ளது.
News January 16, 2026
அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப்புக்கு சொந்தமானதா?

மரியா மச்சாடோ தனது <<18868940>>நோபல்<<>> பதக்கத்தை டிரம்ப்புக்கு பரிசாக வழங்கினார். சுதந்திர வெனிசுலாவை பாதுகாக்க டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளுக்காக இதை வழங்குவதாக மரியா கூறினார். இதற்கு டிரம்ப், ‘பரஸ்பர மரியாதையின் அடையாளம்’ என நன்றியும் தெரிவித்துள்ளார். அதேநேரம், நோபல் பரிசை மாற்றவோ, பகிரவோ முடியாது என்பதால், பதக்கம் டிரம்ப்பிடம் இருந்தாலும், கௌரவம் மரியாவுக்கே சொந்தம் என நோபல் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.


