News September 26, 2025
2026 தேர்தல்.. முடிவை மாற்றிய விஜய்

2026 தேர்தலுக்காக விஜய், புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் விஜய், N.ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்ட ஒரு சில தலைவர்கள் மட்டுமே மக்களுக்கு அறியப்பட்டவர்களாக உள்ளனர். பல மாவட்ட செயலாளர்களை நிர்வாகிகளுக்கு கூட தெரியாத சூழல் உள்ளதால், பரப்புரையின்போது அந்தந்த தொகுதிகளின் முக்கிய நிர்வாகிகளை மக்களுக்கு விஜய் அறிமுகம் செய்ய உள்ளாராம். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 471
▶குறள்:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
▶பொருள்: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.
News September 27, 2025
விஜய் பேச்சுக்கு வைகோ வரவேற்பு

1.37லட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இலங்கை தமிழர்களுக்காக விஜய் உட்பட யார் குரல் கொடுத்தாலும், அதை மனதார வரவேற்பதாக சென்னையில் அளித்த பேட்டியில் வைகோ கூறியுள்ளார்.
News September 27, 2025
புதுச்சேரியில் தீபாவளிக்கு பரிசுத் தொகுப்பு

தீபாவளிக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 5 பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தீபாவளி தொகுப்பில், 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சூர்ய காந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என 5 பொருட்கள் கொடுக்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் இந்தத் தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.