News September 26, 2025

பந்தலூர் கூடலூரில் 1மணி நேரம் கனமழை!

image

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடியும் நிலையில், இன்று பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்து சிரமப்பட்டனர். பல இடங்களில் ஆட்டோக்கள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Similar News

News January 31, 2026

நீலகிரி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>க்ளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 31, 2026

நீலகிரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நீலகிரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

நீலகிரி: சிறுமியை சீரழித்தவருக்கு அதிரடி தீர்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி. இவரை அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக வழக்கு நடைபெற்றது. இதில் ஊட்டி மகிளா கோர்ட் கலைச்செல்வனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை.

error: Content is protected !!