News September 26, 2025
செந்துறை அருகே அரசு பள்ளியில் மின்விசிறிகள் திருட்டு

அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் ஊராட்சி சிவராமபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தில் இருந்த இரண்டு மின்விசிறிகளை மர்ம நபர்கள் திருடிவிட்டு “ஜெய்பீம் சமத்துவ தலைவர் முதலாமாண்டு நினைவேந்தல் சங்கமம் – 2025” என்று எழுதி வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
Similar News
News January 15, 2026
அரியலூர்: ரயில் விபத்தில் ராணுவ வீரர் பலி – சோகம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(47). இந்திய ராணுவத்தில் சுபேதாரராக பணியாற்றி வந்த இவர் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வருவதற்காக தெலுங்கானா வாரந்தாங்கல் பகுதி அருகே வந்த போது, எதிர்பாரா விதமாக ரயில் கதவில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் இன்று மதியம் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
News January 15, 2026
அரியலூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9842074680) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News January 15, 2026
அரியலூர்: 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கும், அதனுடன் இணைந்த பார்களுக்கும், எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்களுக்கும் நாளை ஜன.16ஆம் தேதி மற்றும் வருகிற ஜன.26ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் இயங்காது என கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். மேலும் அன்றைய நாட்களில் இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.


