News September 26, 2025

ஆரம்பத்திலேயே ஏமாற்றிய கில்

image

இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ரன்களை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டாவது ஓவரிலேயே இந்தியா முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 2-வது ஓவரை திக்‌ஷனா வீச, அந்த பந்தை எப்படி கையாள்வது என்ற குழப்பத்தில் கில் (7 ரன்) தடுத்து ஆட, பாய்ந்து கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார் தீக்‌ஷனா. இதனால் 2-வது ஓவர் முடிவில் இந்திய அணி 22/1 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News

News January 16, 2026

திமுக அரசின் கொள்ளைத் திட்டம்: அன்புமணி

image

1553 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ₹9.50 வரை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும். எனவே, சந்தை சராசரி விலையை கணக்கிட்டு, அதற்கும் குறைவான விலையிலேயே மின்சாரத்தையும் வாங்க ஆணையிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News January 16, 2026

சனாதன தர்மத்தில் வேரூன்றி நிற்கும் திருவள்ளுவர்: R.N.ரவி

image

திருவள்ளுவர் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, கவர்னர் RN ரவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவரது X-ல், வள்ளுவரின் ஆழமான ஞானம், பல நூற்றாண்டுகளாக பாரதத்தின் தார்மீக மற்றும் ஆன்மிக உணர்வுகளை வடிவமைத்துள்ளது. பாரதிய பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷமான திருக்குறள், சனாதன தர்மத்தின் நித்திய நெறிமுறைகளில் திடமாக வேரூன்றி, காலம் கடந்து நிற்கிறது என்று கூறியுள்ளார்.

News January 16, 2026

நடிகை கனகா சந்திப்பு.. புதிய அப்டேட்

image

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடி, <<18843012>>ராமராஜன்<<>>- கனகா சந்தித்த போட்டோ சமீபத்தில் வைரலானது. கனகாவை நீண்ட நாள்களாக பார்க்க வேண்டும் என நினைத்ததாக இந்த மீட்டிங் குறித்து ராமராஜன் தெரிவித்துள்ளார். இருவரும் பழைய விஷயங்கள் குறித்து பேசியதாகவும், அது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குண்டாகி​விட்​ட​தாக வருத்தப்பட்ட கனகாவிடம் மனசு​தான் முக்கியம் என கூறியதாகவும் ராமராஜன் பகிர்ந்து கொண்டார்.

error: Content is protected !!