News September 26, 2025
டி.என்.பி.எஸ்.சி தேர்வு அலுவலர்களுக்கு பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் II & IIA தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், தேர்வாணைய பிரிவு அலுவலர் சிவன், உதவி பிரிவு அலுவலர் காந்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 15, 2026
ராணிப்பேட்டையில் முக்கிய அரசு எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.
News January 15, 2026
ராணிப்பேட்டை: பொங்கல் நேரத்தில் கரண்ட் கட்டா?

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க சென்னை மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News January 15, 2026
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வாழ்த்து!

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.15) பொதுமக்களுக்கு இனிய வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பொங்கல் திருநாள் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, நலன் மற்றும் வளம் கொண்டு வர வாழ்த்தி, பாதுகாப்பான மற்றும் அமைதியான திருநாளை கொண்டாடுமாறு வாழ்த்துதல் தெரிவித்துள்ளார்.


