News September 26, 2025
₹1,000 உரிமைதொகை கிடைக்க அதிமுகவே காரணம்: EPS

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என CM ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய் என EPS சாடியுள்ளார். அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைதொகை ₹1,000-ஐ திமுக அரசு கொடுப்பதாகவும், தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளதால், அனைவருக்கும் மகளிர் உரிமைதொகை என கூறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், கோர்ட் உத்தரவால் 1.5 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதும் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 27, 2025
புதுச்சேரியில் தீபாவளிக்கு பரிசுத் தொகுப்பு

தீபாவளிக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 5 பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தீபாவளி தொகுப்பில், 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சூர்ய காந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என 5 பொருட்கள் கொடுக்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் இந்தத் தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.
News September 27, 2025
அனிருத்துடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்

சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே படத்தின் ப்ரோமோ ஒன்று அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இதனிடையே படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறனுடன் அனிருத் கூட்டணி அமைக்கும் முதல் படம் என்பதால் இதுவும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
News September 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 27, புரட்டாசி 11 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்▶பிறை: வளர்பிறை