News September 26, 2025

அமெரிக்கா இதை அனுமதிக்க வேண்டும்: இந்தியா

image

ஈரான், வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு USA-விடம் இந்தியா கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு சமீபத்தில் USA சென்றது. அப்போது ரஷ்யா, ஈரான், வெனிசுலாவில் இருந்து ஒரே நேரத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடைவிதித்தால், அது சர்வதேச அளவில் விலையேற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

Similar News

News September 27, 2025

புதுச்சேரியில் தீபாவளிக்கு பரிசுத் தொகுப்பு

image

தீபாவளிக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 5 பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தீபாவளி தொகுப்பில், 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சூர்ய காந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என 5 பொருட்கள் கொடுக்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் இந்தத் தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.

News September 27, 2025

அனிருத்துடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்

image

சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே படத்தின் ப்ரோமோ ஒன்று அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இதனிடையே படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறனுடன் அனிருத் கூட்டணி அமைக்கும் முதல் படம் என்பதால் இதுவும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

News September 27, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 27, புரட்டாசி 11 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்▶பிறை: வளர்பிறை

error: Content is protected !!