News April 13, 2024
அதிமுகவுக்கு அசாதுதீன் ஓவைசி கட்சி ஆதரவு

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி அறிவித்துள்ளது. ஓவைசி தனது X பக்கத்தில், “மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு AIMIM ஆதரவளிக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்” என பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம், தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது ஓவைசி கட்சியும் இணைந்துள்ளது.
Similar News
News September 16, 2025
7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், வரும் 21-ம் தேதி வரையிலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
News September 16, 2025
ஒரு லட்சம் வரை குறைந்த SWIFT காரின் விலை

சமீபத்தில் ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு, மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. ஸ்விஃப்ட் மாடலுக்கு ₹1.06 லட்சம் வரையிலும், டிசையர் மாடலுக்கு ₹87,000 வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் Wagon R (₹64,000வரையும்), Celerio (₹63,000), Alto K10 (53,000), S-Presso விலை (53,000) வரையும் குறைகிறது.
News September 16, 2025
தினமும் காலையில் இதை செய்ய மறக்காதீர்

*காலையில் எழுந்ததும் ஒரு சில நிமிடங்கள் மனதை லேசாக்கி, ஆழ்ந்த மூச்சு விடுங்கள் *ஓவ்வொரு நாளையும் புதிதாக தொடங்குங்கள் *காலை உணவை உட்கொள்ள தவறாதீர்கள் *இன்றைய நாளுக்கான உங்கள் வேலைகளை பட்டியலிடுங்கள் *சுறுசுறுப்பாக இருங்கள் *சக ஊழியர்களிடம் புன்னகையுடன் பேசுங்கள்.