News September 26, 2025

தருமபுரி: விஜய் வரும் தேதியில் மாற்றம்

image

தவெக தலைவர் விஜய் தருமபுரியில் நவ.1ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.22இல் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷேர் IT

Similar News

News February 16, 2026

தருமபுரியில் சிறுமி உடல் வெந்து பலி!

image

அஞ்சலி என்பவர் தனது 2 வயது குழந்தை தனுஜாவுடன் பாப்பாரப்பட்டியில் தனது உறவினர் வினோத் வீட்டில் தங்கி இருந்தார். வீட்டில் தனுஜா விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சூடான கறி குழம்பு இருந்த பாத்திரத்தின் மீது விழுந்தாள். இதனால் சிறுமி உடல் வெந்து அலறி துடித்தாள். பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

News February 16, 2026

தருமபுரியில் 7,838 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

image

தருமபுரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் உரிய சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.15) தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மாவட்டத்தில் 5 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, விபத்து கால அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!