News September 26, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவலர் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், கோபி பகுதிகளில் இன்று (26.09.2025) இரவு நேர காவல்துறை ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் தங்களது பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் கொலை, கொள்ளை, புகையிலை, மது விற்பனை போன்ற சம்பவங்களை கண்டால், ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தகவல் வழங்கலாம். அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.

Similar News

News January 13, 2026

ஈரோட்டில் சவுக்கு சங்கர் மீது புகார்

image

பகுஜன் சமாஜ் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பழனி தலைமையிலான கட்சியினர் எஸ்.பி. சுஜாதா-விடம் மனு அளித்தனர். அதில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, சவுக்குசங்கர் பணம் சம்பாதித்து வருகிறார். விமர்சனம் என்ற பெயரில் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரையும் இழிவுபடுத்தி பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

News January 13, 2026

ஈரோடு அருகே தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

ஈரோடு, மாதம்பாளையத்தைச் சேர்ந்தவர் குபேரன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்துள்ளார். இதில் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குபேரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 13, 2026

ஈரோடு: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

error: Content is protected !!