News September 26, 2025
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி

தமிழ்நாட்டின் மாபெறும் கல்வி எழுச்சியை கொண்டாடும் விதமாக ”கல்வியில் சிறந்த தமிழ்நாடு ” என்னும் கருப்பொருளில் திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (25.09.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், அரசு அதிகாரிகள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Similar News
News September 27, 2025
தி.மலை: இரவு ரோந்து பணி விபரம்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News September 26, 2025
திருவண்ணாமலை: விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் தலைமையில் இன்று (26.09.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செப்டம்பர் மாத மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் விவசாயிகள் நேரடியாக தங்கள் பிரச்சினைகள், பரிந்துரைகள், திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
News September 26, 2025
தி.மலைக்கு விஜய் எப்போது வருகிறார்? பயணத்தில் மாற்றம்

தவெக தலைவர் விஜய் தி.மலையில் வரும் நவ.8ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.15ஆம் தேதி தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.