News September 26, 2025
‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போது?

‘ஜனநாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா, வரும் டிசம்பர் 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இப்படியொரு இசை வெளியீட்டு விழாவை பார்த்திருக்கவே முடியாது என்ற அளவுக்கு, மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். 2026 பொங்கலை முன்னிட்டு இப்படம் ரிலீஸாக உள்ளது.
Similar News
News September 27, 2025
அமெரிக்க வரிவிதிப்பால் மருந்துகள் துறை பாதிக்காது

இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மருந்துகள் மீது அமெரிக்கா 100% இறக்குமதி வரி விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பு இந்திய மருந்துகள் துறையை பாதிக்காது என்று அத்துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வரிவிதிப்பு பேடன்ட் செய்த மருந்துகள் மீதுதான். நாம் பெருமளவு ஜெனரிக் மருந்துகளை தான் ஏற்றுமதி செய்கிறோம். ஆகவே, இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று PEPCI தலைவர் நமித் ஜோஷி தெரிவித்துள்ளார்.
News September 27, 2025
Fake வெப்சைட்டுகளை கண்டுபிடிக்க..

➱https:// உடன் தொடங்கி, பெயரில் எழுத்துப் பிழைகள் இருந்தால், போலியானதாக இருக்கலாம் ➱Domain-ஐ சரிபார்க்கவும். அண்மையில் தொடங்கப்பட்டதாக இருந்தால், போலியானதாக இருக்க வாய்ப்புகள் உள்ளன ➱ஒரு பக்கத்திற்குள் சென்றவுடன் அது வேறொரு பக்கத்திற்கு சென்றால், அது போலியானதாக இருக்கலாம் ➱அரசு இணையதளம் எனில், gov.in என கடைசியில் இருக்கும் ➱போலி தளங்களை பார்த்தால், 1930 என்ற எண்ணிற்கு தகவல் கொடுங்கள். SHARE.
News September 27, 2025
2 லெஜண்ட்களுக்கு தேசிய விருதுடன் அஞ்சலி

‘பார்க்கிங்’ படத்திற்காக தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர், சென்னையில் உள்ள சிவாஜி கணேசனின் வீட்டிற்கு சென்று, அவரது போட்டோக்கு முன் விருதை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்ற அவர், தேசிய விருதை வைத்து வணங்கினார். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்திடம், தனது குருவிற்கு இது சமர்ப்பணம் என தெரிவித்தார். ‘பார்க்கிங்’ படம் 3 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.