News September 26, 2025
தருமபுரி: விஜய் வரும் தேதியில் மாற்றம்

தவெக தலைவர் விஜய் தருமபுரியில் நவ.1ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.22இல் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷேர் IT
Similar News
News January 13, 2026
தருமபுரியில் பொங்கல் விழா; எம். பி அழைப்பு

தருமபுரி மாவட்டக் கழக அலுவலகத்தில் பொங்கல் விழா நாளை (ஜன.14) காலை 10.00 மணி அளவில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு எம். பி மணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
தருமபுரி: சாமந்திப்பூ விற்பனை படுஜோர்!

தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் பொங்கலை முன்னிட்டு சாமந்திப்பூ வியாபாரம் அதிகரித்துள்ளது. இதில் 1 கிலோ சாமந்தி பூ ரூ. 50 என விற்பனையானது. மேலும் ஒரு குவிண்டால் (100 கிலோ) பூ ரூ.5000 முதல் ரூ.8500, குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ₹20,000 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் விளைச்சல் அதிகரித்தால் விலை குறையலாம் என வியாபாரிகள் தெரிவித்த்தனர்.
News January 13, 2026
தருமபுரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தருமபுரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


