News September 26, 2025
ராணிப்பேட்டை: சர்ச்சையான வைரல் போஸ்டர்

அரக்கோணத்தில் ரோபோ சங்கரின் மறைவை குறிப்பிட்டு மது விழிப்புணர்வு பேரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. அதில் ‘எனக்கு மொழி, இனம், சாதி, மதம், நாடு, ஆண், பெண், இரவு, பகல், சின்னவன், பெரியவன், ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி, அதிபதி, போண்டி, சர்வாதி, அடிமை இவற்றை எனக்கு பிரித்து பார்க்க தெரியாது. என்னைத் தொட்டான் அவன் கெட்டான்’ என்ற வாசகம் உள்ள நிலையில், சர்ச்சையாகியுள்ளது.
Similar News
News January 9, 2026
வாலாஜா மகளிர் கல்லூரியில் காணொளி மூலம் பார்வை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.09) திருவள்ளூர் மாவட்டத்தில் “உங்கள் கனவை சொல்லுங்க” என்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வை இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் இராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பார்வையிட்டனர்.
News January 9, 2026
இது நம்ம ஆட்டம் 2026 – இராணிப்பேட்டை மாவட்டம்

தமிழ்நாட்டின் மிகப்பெரிய இளைஞர் விளையாட்டு திருவிழாவான “இது நம்ம ஆட்டம் 2026” இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் 16 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகள் ஜன.22 முதல் பிப்.08 வரை ஊராட்சி, மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் நடைபெறும்.
பதிவு செய்ய கடைசி தேதி ஜன.21. பங்கேற்க விரும்புவோர்
www.sdat.tn.gov.in, www.cmyouthfestival.sdat.in இணையதளங்களில் பதிவு செய்யலாம்.
News January 9, 2026
ராணிப்பேட்டை வாக்காளர்கள் கவனத்திற்கு…

ராணிப்பேட்டை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


