News September 26, 2025
தி.மலைக்கு விஜய் எப்போது வருகிறார்? பயணத்தில் மாற்றம்

தவெக தலைவர் விஜய் தி.மலையில் வரும் நவ.8ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.15ஆம் தேதி தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
வந்தவாசியில் பயங்கரம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பத்திர எழுத்தர் இந்திரன் என்பவரை, அந்த கும்பல் கத்தியால் வெட்டியது. இதில் காலில் பலத்த காயமடைந்த இந்திரனுக்கு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் 18 தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News January 12, 2026
திருவண்ணாமலையில் துடிதுடித்து பலி!

போளூர் அருகே, மட்டபிறையூரிலிருந்து மொடையூர் கிராமத்திற்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்த நண்பர்கள் விஜய் (25) மற்றும் விக்னேஷ் (16) ஆகிய இருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போளூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
News January 12, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (11.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும், ரோந்து காவலர் தொலைபேசி என்ணை மேலே காணலாம். அவசர தேவைக்கு மேலே உள்ள இரவு ரோந்து காவலர் தொலை பேசி என்னை அழைக்கவும். ஷேர் செய்யவும்.


