News September 26, 2025

பெரம்பலூர்: பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அ.மேட்டூரை சேர்ந்த பள்ளி மாணவிகள் தினந்தோறும் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அப்போது அதே ஊரைச் சேர்ந்த தங்கதுரை மகன் கௌதமன் மாணவிகளை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் கொதமணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 17, 2026

பெரம்பலூர்: ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி?

image

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் (50). இவர் சென்னையில் நடந்த போராட்டத்தின் போது தற்கொலை முயற்சி செய்து, கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட பகுதிநேர ஆசிரியர் கண்ணனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும், என்று தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 17, 2026

பெரம்பலூர்: மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி

image

கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் (55). இவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் அறுப்பதற்காக சிறுகுடலைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டவர்கள் மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ராஜேந்திரன் உடலை மீட்டு அவர் எவ்வாறு உயிரிழந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

பெரம்பலூர்: பகுதிநேர ஆசிரியர் தற்கொலை

image

சென்னையில் கடந்த 13-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பகுதிநேர ஆசிரியர்களில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணனும் (50) ஒருவர். மன உளைச்சலில் இருந்த கண்ணன் போராட்டதின்போதே திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சக பகுதிநேர ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் கடந்த 14-ம் தேதி உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!