News September 26, 2025
சென்னை: விஜய் சுற்றுப்பயணம் மாற்றம்

தவெக தலைவர் விஜய் சென்னையில் வரும் அக்.25ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக பிப்ரவரி-21-2026 ம் தேதி சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (SHARE)
Similar News
News January 16, 2026
சென்னை: உங்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. நண்பர்களுக்கு பகிரவும்.
News January 16, 2026
சென்னை: சாலை விபத்தில் IT ஊழியர் பலி!

சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல கிருஷ்ணன் (23) கே.கே.நகர் சாலையில் நேற்று டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி பைக் மரத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் எதிர் திசையில் வந்த டெலிவரி ஊழியர் சுரேன் பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 16, 2026
சென்னை: ஊருக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

போரூர் ஹெரிடேஜ் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் இளவரசன் (36) பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதியன்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரூ.13.20 லட்சம் பணம், தங்க நாணயங்கள் திருடப்பட்டன. புகாரின் பேரில் வானகரம் போலீசார், சூர்யா, முரளி, டில்லிபாபு, வாணி, யுவஸ்ரீ, ஆர்த்தி ஆகியோரை நேற்று கைது செய்து ரூ.2 லட்சம் பணத்தை மீட்டனர்.


