News September 26, 2025
நாகை: ஆசிரியர் தாக்கியதில் மாணவருக்கு சிகிச்சை

நாகை மாவட்டம் காடம்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், நேற்று மதியம் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவரை உடற்கல்வி ஆசிரியர் அழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் உணவு உண்டுவிட்டு சென்ற மாணவரை, PT ஆசிரியர் தாக்கியுள்ளார். இதில், படுக்காயமடைந்த மாணவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News September 27, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.26) இரவு 10 மணி முதல் இன்று(செப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலர்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 26, 2025
நாகையில் பழந்தமிழர் பாரம்பரிய கருவிகளின் இசை நிகழ்ச்சி

நாகை மாவட்டம் நிர்வாகத்துடன் நாகை தனியார் ஷாப்பிங் மால் இணைந்து வழங்கும் பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி வருகிற செப்.28ம் தேதி நாகை புதிய கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு, பாரம்பரிய கலைக்களம் கலைக்குழுவின் நிறுவனர் சவுண்ட் மணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பாரம்பரிய இசை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.