News April 13, 2024

தண்டையார்பேட்டை :சாலையில் திடீர் பள்ளம்

image

ஆர் கே நகர் தொகுதி தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள டி எச் சாலையில் மூன்றடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அந்த பகுதியில் உள்ள மக்கள் பள்ளத்தில் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக கொம்பு வைத்துள்ளனர். மாநகராட்சிக்கும் நெடுஞ்சாலை துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News August 23, 2025

உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்சம் நிதியுதவி

image

சென்னை, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி துப்புரவுப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இதனை கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

News August 23, 2025

சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

image

சென்னையில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, சோழிங்கநல்லூரில் 98.5 மி.மீ, புரசைவாக்கத்தில் 77.6 மி.மீ, அம்பத்தூரில் 58 மி.மீ, தண்டையார்பேட்டையில் 46 மி.மீ, மாம்பலத்தில் 41.2 மி.மீ மற்றும் பெரம்பூரில் 40.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

News August 23, 2025

சென்னையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

image

சென்னை, கண்ணகி நகரில் இன்று காலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி (50) என்பவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்தவர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர் மின்சார கம்பிகள் மற்றும் உபகரணங்கள் உள்ள இடங்களில் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!