News September 26, 2025
மனிதத்தன்மையை வன்முறை அழித்துவிடும்: நிவேதா பெத்துராஜ்

செய்தி ஊடகங்களின் கொலை, போர், கொடுமை காட்சிகள்தான் எளிதில் பகிரப்படுவதாக நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் பதிவில், நாம்தேடாவிட்டாலும் அதை நுகர்கிறோம் என குறிப்பிட்டவர், இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், தகவலை அறிய வேறு வழி தேவை என்றும் பதிவிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் நெகட்டிவிட்டி தான் ஜாஸ்தியா?
Similar News
News September 26, 2025
₹30 லட்சம் வாட்ச் உடன் சமந்தா PHOTOS

நடிகை சமந்தா அழகு மட்டுமல்ல திறமை, உழைப்பு என ரசிகர்களை கவர்ந்தவர். சமந்தா, உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுடன் போராடி, தனது பயணத்தை தைரியமாக தொடர்ந்து வருகிறார். தன்னைப் போன்று பல பெண்களுக்கு முன்மாதிரியாக உள்ளார். பியாஜெட்டின் ஜுவல்லரி வாட்ச் அணிந்து போட்டோஸ் வெளியிட்டுள்ளார். இவர் அணிந்திருக்கும் வாட்ச்-யின் விலை ₹30 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த போட்டோஸ் பிடித்திருந்தா லைக் போடுங்க.
News September 26, 2025
கள்ளச்சந்தையில் காவி ஐபோன் அமோக விற்பனை

காவி நிறத்தில் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 போன்களும் இந்தியாவில் வேகமாக விற்றுத்தீர்ந்துள்ளன. பகவான் நிறம் என இந்தியர்களால் வர்ணிக்கப்படும் இந்த போன்கள், ஸ்டாக் இல்லை என கூறப்பட்டாலும், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. டீலர்களை பொறுத்து, போன்களின் விலையை விட ₹5,000 முதல் ₹25,000 வரை கூடுதலாக விற்கப்படுகின்றன.
News September 26, 2025
பிரபல பாடகர் மரணம்… சொன்னது பலித்தது

அசாமின் ஐகானான பாடகர் <<17761763>>ஜுபின் கார்க்<<>>, கடந்த வாரம் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் கடைசியாக பேசிய பாட்காஸ்ட் வைரலாகிறது. அதில் அவர், ‘நான் இறந்தால், அசாமில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்’ என்கிறார். அவர் சொன்னபடியே, 3 நாள் அரசுமுறை துக்கத்துக்கு பின் அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடந்தது. மக்களின் குரலாக ஒலித்த மகா கலைஞனுக்கு பல லட்சம் மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.