News September 26, 2025
விஜய் வாகனத்தை ஃபாலோ செய்யாதீங்க

தவெக தலைவர் விஜய் நாளை, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார். இந்நிலையில், விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம். மக்கள் சந்திப்பு நடைபெறும் பகுதிகளில் உள்ள கட்டடம், மின் விளக்கு கம்பம் உள்ளிட்டவற்றின் அருகில் செல்ல வேண்டாம். கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், சிறார்கள், பரப்புரைக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 26, 2025
அக்.4-ல் தமிழகம் வரும் துணை ஜனாதிபதி!

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வரும் 4-ம் தேதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகிறார். 2 நாள்கள் பயணமாக TN வரும் அவருக்கு அரசு சார்பிலும், பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4-ம் தேதி சென்னையில் தங்கும் அவர் பல முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். 5-ம் தேதி கோவை செல்லும் அவர் தனது வீட்டிற்கு சென்று குடும்பத்தினரையும் சந்திக்க உள்ளார்.
News September 26, 2025
OK என்ற இரண்டு எழுத்துக்கு பின்னாடி இவ்வளோ வரலாறா?

தினமும் பயன்படுத்தப்பட OK என்ற இரண்டு எழுத்து வார்த்தையின் வரலாறு தெரியுமா? 182 ஆண்டுகளுக்கு முன்னதாக ‘Olla kalla’ (அதாவது அனைத்தும் சரி), என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து OK தோன்றியதாக கூறப்படுகிறது. 1840-ம் ஆண்டில், US ஜனாதிபதி மார்ட்டின் வான் ப்யூரனின் பிரசாரத்தில் பயன்படுத்த, அது பிரபலமானது. அவருக்கு ‘Old kinderhook’ என்ற புனைப்பெயர் இருக்க, அதனை சுருக்கி ஆதரவாளார்கள் ‘OK’ என குறிப்பிட்டனர்.
News September 26, 2025
BREAKING: மீண்டும் ஒன்றாக சேர்ந்தனர்.. அரசியல் திருப்பம்

OPS, TTV இருவரும் நீண்ட காலங்களுக்கு பிறகு சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. சென்னை நந்தனத்தில் விஐடி பல்கலை., குடும்பத்தின் திருமண விழாவில் பங்கேற்ற இருவரும், ஒரே சோபாவில் அமர்ந்து சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தினர். NDA கூட்டணியிலிருந்து இருவரும் விலகிய பிறகு மீண்டும் கூட்டணிக்குள் இணைய பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த சந்திப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.