News September 26, 2025

சனியன்களை சேர்த்து சட்டை தைத்தார் விஜய்: சீமான்

image

திமுகவிலிருந்து 2 இட்லியும், அதிமுகவில் இருந்து 2 தோசையும் எடுத்த விஜய், அதை பிச்சுபோட்டு உப்புமாவை கிளறுவதாக சீமான் கூறியுள்ளார். மேலும், திமுக, அதிமுகவை சனியன் என குறிப்பிட்ட அவர், 2 சனியன்களையும் சேர்த்து சட்டை தைத்து, சனிக்கிழமை பிரசாரத்துக்கு விஜய் செல்கிறார் என காட்டமாக விமர்சித்துள்ளார். இதனால், மாற்றம் என்ற சொல்லுக்கும் விஜய்க்கும் சம்மந்தமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 26, 2025

ஆப்பிரிக்க அதிபரை அந்நாட்டு சீமான் என்கின்றனர்: சீமான்

image

நாதகவினர், உலக அரசியலை உள்ளங்கையில் வைத்திருப்பவர்கள் என்று சீமான் கூறியுள்ளார். எதையும் பார்த்து படிக்கும் கட்சி நாங்கள் அல்ல என்ற அவர், நான் இங்கு பேசுவதை அங்கு பேசுவதற்காக ஆப்பிரிக்க அதிபர் இப்ராஹிம் டிராரேவை, அந்நாட்டு சீமான் என புகழ்கின்றனர். இங்கேயோ என்னை பார்த்து சிரிக்கிறீர்கள் என்றார். புர்கினோபாஸோ நாட்டு அதிபர் டிராரே, USA-ஐரோப்பிய ஏகாதிபத்தியதுக்கு எதிரான வலுவான குரலாக ஒலிக்கிறார்.

News September 26, 2025

ஜாக்பாட் அடிக்க போகும் 5 ராசிகள்

image

அக்.3-ம் தேதி புதன், துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் அதிக நன்மைகள் பெறும் ராசியினர்: *மிதுனம்: காதல் வாழ்க்கை சிறக்கும், புகழ், செல்வம் பெருகும் *கடகம்: வீடு, வாகனம் வாங்கும் யோகம், குடும்ப சிக்கல் தீரும் *சிம்மம்: பணவரவு அதிகரிக்கும், IT, மீடியா துறையினருக்கு சாதகம் *விருச்சிகம்: அனுகூலமான நன்மைகள் கிடைக்கும், பழைய குழப்பங்கள் தீரும் *கன்னி: நிதிநிலை மேம்படும், வணிகத்தில் லாபம்.

News September 26, 2025

தொடர் விடுமுறை: 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை நாள்களை முன்னிட்டு சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இன்று முதல் செப்.30 வரை 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல், அக்.4, 5-ல் சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாகவும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் 3 நாள்களுக்கு 93,138 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!