News September 26, 2025

தமிழக போக்குவரத்து கழகத்தில் 1588 காலியிடங்கள்!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 1,588 Graduate Apprentices, Non-Engineering Graduate Apprentices உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 2021- 2025 வரை டிகிரி முடித்தவர்கள் இந்த ஒரு வருட Apprentice பயிற்சியில் சேரலாம். வரும் அக்டோபர் 18-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

Similar News

News September 26, 2025

ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம்… காரணம் இதுதான்

image

ஆண்களை விட பெண்களுக்கு சராசரி ஆயுள் அதிகம் என்பது உலகறிந்த உண்மை. சராசரியாக பெண்கள் 75.6 ஆண்டுகளும், ஆண்கள் 70.8 ஆண்டுகளும் வாழ்கிறார்கள் என்று அண்மையில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த 5 வயது இடைவெளிக்கு என்ன காரணம் என்ற கேள்வி பலரது மனதில் தோன்றியிருக்கும். மேல் உள்ள புகைப்படங்களில் அதற்கான விடை இருக்கிறது.

News September 26, 2025

ஆரம்பத்திலேயே ஏமாற்றிய கில்

image

இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ரன்களை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டாவது ஓவரிலேயே இந்தியா முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 2-வது ஓவரை திக்‌ஷனா வீச, அந்த பந்தை எப்படி கையாள்வது என்ற குழப்பத்தில் கில் (7 ரன்) தடுத்து ஆட, பாய்ந்து கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார் தீக்‌ஷனா. இதனால் 2-வது ஓவர் முடிவில் இந்திய அணி 22/1 ரன்கள் எடுத்துள்ளது.

News September 26, 2025

₹1,000 உரிமைதொகை கிடைக்க அதிமுகவே காரணம்: EPS

image

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என CM ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய் என EPS சாடியுள்ளார். அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைதொகை ₹1,000-ஐ திமுக அரசு கொடுப்பதாகவும், தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளதால், அனைவருக்கும் மகளிர் உரிமைதொகை என கூறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், கோர்ட் உத்தரவால் 1.5 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதும் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!