News September 26, 2025
Subscribers-க்கு காசை திருப்பித்தரும் Amazon

USA-வில் சந்தாதாரர்களின் அனுமதியை பெறாமல் தேவையற்ற Prime Membership-களில் அவர்களை சேர்த்து, கட்டணம் வசூலித்ததாக அமேசான் நிறுவனம் மீது பெடரல் டிரேட் கமிஷன் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை முடித்துவைக்க சுமார் ₹22 ஆயிரம் கோடியை அபராதமாக செலுத்தவுள்ளது அமேசான். இத்தொகையில் இருந்து பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ₹13 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 26, 2025
ஆரம்பத்திலேயே ஏமாற்றிய கில்

இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ரன்களை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டாவது ஓவரிலேயே இந்தியா முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 2-வது ஓவரை திக்ஷனா வீச, அந்த பந்தை எப்படி கையாள்வது என்ற குழப்பத்தில் கில் (7 ரன்) தடுத்து ஆட, பாய்ந்து கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார் தீக்ஷனா. இதனால் 2-வது ஓவர் முடிவில் இந்திய அணி 22/1 ரன்கள் எடுத்துள்ளது.
News September 26, 2025
₹1,000 உரிமைதொகை கிடைக்க அதிமுகவே காரணம்: EPS

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என CM ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய் என EPS சாடியுள்ளார். அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைதொகை ₹1,000-ஐ திமுக அரசு கொடுப்பதாகவும், தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளதால், அனைவருக்கும் மகளிர் உரிமைதொகை என கூறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், கோர்ட் உத்தரவால் 1.5 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதும் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 26, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மெக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறது என கூறப்படுகிறது. SHARE IT.