News September 26, 2025
அரசு நிகழ்ச்சியா? பாடல் வெளியீட்டு விழாவா?

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற அரசு நிகழ்ச்சி பாடல் வெளியீட்டு விழா போல இருந்தது என சீமான் விமர்சித்துள்ளார். 2,500 பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்துவதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பட்டப்படிப்பு முடித்து வரும் இளைஞர்களுக்கு தாய் மொழியில் எழுதத் தெரியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News September 26, 2025
BREAKING: லெஜண்ட் காலமானார்

இந்திய சிகையலங்கார லெஜண்ட் என்று போற்றப்படும் ஹபிப் அகமது (84), வயது மூப்பால் காலமானார். இவரது தந்தை பிரிட்டிஷ் மற்றும் இந்திய தலைவர்களுக்கு ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்தவர். அந்த பாரம்பரியத்தை ஹபிப்பும் தொடர்ந்தார். Ex PM இந்திரா காந்தியின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் கருப்பு / வெள்ளை கீற்று ஹேர் ஸ்டைல், Ex ஜனாதிபதி அப்துல் கலாமின் அலையலையான சில்வர் ஹேர்ஸ்டைல் இவர் உருவாக்கியது தான். #RIP
News September 26, 2025
யார் எவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறீர்கள்?

இந்தியாவில் இனிப்புகள் இல்லாமல் கொண்டாட்டம் இல்லை. அந்த வகையில், எந்த மாநில மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுகிறார்கள்? என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், ஒருநபர் மாதம் சராசரியாக எவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்க எவ்வளவு இனிப்பு சாப்பிடுறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 26, 2025
TNPSC குரூப்-2 தேர்வு: ஒரு இடத்திற்கு 858 போட்டி

நாளை மறுதினம் நடைபெறவுள்ள குரூப்-2, 2A தேர்வுக்கான புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. 1,905 மையங்களில் 5,53,634 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும், ஹால்டிக்கெட் தவிர எவ்விதமான மின்னணு சாதனங்களுக்கும் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. 645 பணியிடங்களுக்கு 5,53,634 பேர் தேர்வு எழுத உள்ளதால் ஒரு இடத்திற்கு 858 பேர் போட்டிப்போடும் சூழல் ஏற்பட்டுள்ளது.