News September 26, 2025
40 வயதில் தமிழ் நடிகை 2வது திருமணமா?

சிவப்பதிகாரம், மகாராஜா போன்ற படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை மம்தா மோகன்தாஸுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தமிழில் ‘மகாராஜா’, ‘பார்க்கிங்’ போன்ற படங்களை தயாரித்த Passion Studios தயாரிப்பாளர் சுதனை மம்தா திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், கோலிவுட்டில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.
Similar News
News September 26, 2025
ஆஸி., A அணியை பந்தாடிய இந்திய A அணி

ஆஸி., A அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இந்திய A அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸி., முதல் இன்னிங்ஸில் 420 ரன்களை எடுத்த நிலையில், இந்தியா 194 ரன்களில் சுருண்டது. இதையடுத்து, 2-வது இன்னிங்ஸில் ஆஸி 185 ரன்களை எடுத்து, 411 ரன்கள் டார்கெட் நிர்ணயித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 176, சாய் சுதர்சன் 100 எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
News September 26, 2025
40,000 ஆண்டுகளா? என்ன ஒரு ஆச்சரியம்!

சைபீரியாவில் 40,000 ஆண்டுகள் பழமையான ஓநாய் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இது, பலரது கவனத்தையும் ஈர்த்த சமீபத்திய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக உள்ளது. ஓநாயின் பற்கள் மற்றும் உறுப்புகள் முழுமையாக உள்ளது. மேலும், அதன் DNA சிதையாமல் அப்படியே உள்ளதால், அழிந்துபோன இனங்கள் குறித்து பல்வேறு தகவல்களை பெற முடியும். 40,000 ஆண்டுகள் எப்படி அப்படியே பாதுகாப்பாக உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.
News September 26, 2025
லடாக் கலவரம்: சோனம் வாங்சுக் கைது

லடாக் கலவரத்திற்கு காரணமானவர் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சமூக ஆர்வலர் <<17821201>>சோனம் வாங்சுக்<<>>, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரது கைதை தொடர்ந்து லே மாவட்டத்தில் இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3-வது நாளாக லே மாவட்டத்தில் இன்றும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.