News September 26, 2025
நீங்கள் உண்மை என நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள்

இந்த காலகட்டத்தில் சரியான உணவு பழக்கம் பற்றிய விழிப்புணர்வு வந்தாலும், கூடவே பொய்யான நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன. அவர்களும் இதனை அப்படியே நம்பி பின்பற்றுவதால் வேறு சில உடல்நல பிரச்னைகளுக்கும் ஆளாகின்றனர். அப்படி நீங்கள் உண்மை என நம்பியிருக்கும் பொய்யான தகவல்களை பற்றி மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணி தெரிஞ்சுக்கோங்க. விழிப்புணர்வுக்காக எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 26, 2025
விஜய் வாகனத்தை ஃபாலோ செய்யாதீங்க

தவெக தலைவர் விஜய் நாளை, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார். இந்நிலையில், விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம். மக்கள் சந்திப்பு நடைபெறும் பகுதிகளில் உள்ள கட்டடம், மின் விளக்கு கம்பம் உள்ளிட்டவற்றின் அருகில் செல்ல வேண்டாம். கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், சிறார்கள், பரப்புரைக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
News September 26, 2025
பெண்களை விட ஆண்களுக்கு Heart Attack அதிகம் வருவது ஏன்?

பெண்களை காட்டிலும், ஆண்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது ஏன் தெரியுமா? பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், அவர்களின் இதய ரத்த ஓட்டத்தை சீராக்கி பாதுகாக்கிறது. இதையேதான் ஆண்களுக்கு, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனும் செய்கிறது. ஆனால், 40 வயதுக்கு மேல் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய தொடங்குகிறது. இதுதான் ஆண்களுக்கு அதிகமாக ஹார்ட் அட்டாக் வரக் காரணம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
News September 26, 2025
சனியன்களை சேர்த்து சட்டை தைத்தார் விஜய்: சீமான்

திமுகவிலிருந்து 2 இட்லியும், அதிமுகவில் இருந்து 2 தோசையும் எடுத்த விஜய், அதை பிச்சுபோட்டு உப்புமாவை கிளறுவதாக சீமான் கூறியுள்ளார். மேலும், திமுக, அதிமுகவை சனியன் என குறிப்பிட்ட அவர், 2 சனியன்களையும் சேர்த்து சட்டை தைத்து, சனிக்கிழமை பிரசாரத்துக்கு விஜய் செல்கிறார் என காட்டமாக விமர்சித்துள்ளார். இதனால், மாற்றம் என்ற சொல்லுக்கும் விஜய்க்கும் சம்மந்தமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.