News September 26, 2025
கோவையில் காட்டு யானை தாக்கி பலி!

கோவை மருதமலை அடுத்துள்ள சின்னமலை பகுதியில் ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மருதாச்சலம் என்ற செந்தில் (42) நேற்றிரவு தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு புதரில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை அவரை தாக்கியது.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை ஜிஎச் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்
Similar News
News September 26, 2025
கோவை கலெக்டர் ஆப்பீஸ்க்கு 7வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 7வது முறையாக மீண்டும் மிரட்டல் வந்ததால் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ச்சியான மிரட்டலால் அப்பகுதியில் மீண்டும் பதட்டம் நிலவியது.
News September 26, 2025
அடையாளம் தெரியாத இளைஞர் ரயில் மோதி பலி

கோவை ரயில்வே காவல் போலீசார் இன்று கூறியதாவது.. ஆவாரம்பாளையம் முதல், பீளமேடுக்கு இடையே, உள்ள தண்டவாளத்தில் அந்த வழியாக சென்ற, ரயிலில், அடிபட்டு சுமார், 30 வயது மதிக்கத்தக்க, முகவரி தெரியாத ஆண் நபர் இறந்துள்ளார். கோவை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.
News September 26, 2025
கனிமவள கொள்ளையை தடுக்க சிசிடிவி பொருத்தம்!

கோவை மாவட்டத்தில் பேரூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, கோவை வடக்கு ஆகிய தாலுகாக்களில் சில ஆண்டுகளாகவே கனிம வள கொள்ளை நடந்து வருகிறது. இதனை தடுக்க கோவை மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதி ரூ.1.80 கோடியில் அதிநவீன ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் தற்போது கிணத்துக்கடவு பகுதியில் 8 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.