News April 13, 2024
சென்னையில் போலீசார் வாகனம் மோதி பலி

திருவொற்றியூர் அங்காளம்மன் கோயில் பீச் ரோட்டில் உள்ள போலீஸ் பூத் அருகே போக்குவரத்து போலீசாரின் ரெக்கவரி வாகனத்தை தர்மராஜ் என்ற காவலர் பின்பகுதியில் இயக்கும்போது பின்னால் படுத்திருந்த மஞ்சுளா (38) என்ற பெண்மணி மீது தலையில் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பலியானர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News October 15, 2025
சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 17, 18 ஆகிய தேதிகளில் இரவு 11:35 மணிக்கு கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் செல்கிறது. தாம்பரத்தில் இருந்து வரும் 16, 18 ஆகிய தேதிகளில் இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பிற்பகல் 1:25 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 15, 2025
சென்னையில் மழை! ஸ்தம்பித்த வாகனங்கள்

சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மதுரவாயல், வானகரம் பூந்தமல்லி நெற்குன்றம், கிண்டி, பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால், பணிக்கு செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.
News October 15, 2025
சென்னை: தந்தைக்கு எமனாகிய மகன்

சென்னை குரோம்பேட்டையில் வசித்து வரும் சிவலிங்கத்தை(76), கடந்த 15 ஆண்டுகளாக மன நல சிகிச்சை பெற்று வரும் அவரது மகன் நிரோஷன்(40) நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கொரியர் வந்துள்ளதாக கூறி தாயை வெளியில் அனுப்பிவிட்டு, கத்தியால் தந்தை சிவலிங்கத்தை வயிற்றில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். சிட்லபாக்கம் போலீஸார் நிரோஷனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.