News April 13, 2024

தர்மபுரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் பிற பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பதிவுள்ள அலுவலர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் சிறப்பு வாக்குப்பதிவு மையம் வசதி உள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News August 22, 2025

இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள் (2/2)

image

▶️ சொத்து தகராறு
▶️ குடும்ப பிரச்சனை
▶️ கடன் பிரச்சனை
▶️ குழந்தைகள் & பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் . நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும் ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

தர்மபுரி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தர்மபுரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04342-233781, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17482330>>மேலும் அறிய<<>>

News August 22, 2025

தர்மபுரி: 10th பாஸ் போதும்; போலீஸ் வேலை!

image

தர்மபுரி இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!