News September 26, 2025
திருவாரூர்: மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா!

நீடாமங்கலம் அருகே பரப்பனமேடு பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (35) என்பவர் குடோனில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இத்தகவலின் பேரில், போலீசார் சோதனை செய்தனர். அப்போது, 13 மூட்டைகளில் 300 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்ததை அடுத்து, முனியப்பனை தேடி வருகின்றனர். இதேபோல, ஆதனூர் மண்டபத்தைச் சேர்ந்த சுரேஷ் (28) என்பவரும் குட்கா விற்பனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News September 26, 2025
திருவாரூர்: ரேஷன் கடை பிரச்சனையா? இத பண்ணுங்க!

திருவாரூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News September 26, 2025
திருவாரூரில் பிறந்த பிரபலங்கள்!

திருவாரூர் மாவட்டத்தில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
✅மன்னார்குடி சாம்பசிவ பாகவதர்-இசையமைப்பாளர்
✅N.கோபாலசாமி-இந்தியாவின் 15 வது தலைமை தேர்தல் ஆணையர்
✅மனோரமா-திரைப்பட நடிகை
✅K.பாலச்சந்தர்-திரைப்பட இயக்குனர்
✅MSபாஸ்கர்-திரைப்பட நடிகர்
✅திருவாரூர் வைத்தியநாதன்-மிருதங்கம் கலைஞர்
இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியபடுத்துங்க! உங்களுக்கு தெரிந்தவர்களை கமெண்டில் சொல்லுங்க!
News September 26, 2025
திருவாரூர்: குடும்ப வன்முறையா? இத பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…