News September 26, 2025

ஏமாற்று வேலையில் தேர்ந்தவர் செந்தில் பாலாஜி: EPS

image

மழைக்கே அடங்காத மக்கள் கூட்டம், After all ஸ்டாலின் அரசின் 10 ரூபாய் முன்னாள் அமைச்சர் ஏவும் அடக்குமுறைகளுக்கு அடங்கிவிடுமா என்று EPS காட்டமாக கேட்டுள்ளார். கரூரில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஒட்டுமொத்த ஏமாற்று வேலைகளை கற்று தேர்ந்தவர் செந்தில் பாலாஜி என்று விமர்சித்தார். மின் துறையில் மின் மாற்றி வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளதாகவும் EPS குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News September 26, 2025

இனி மாதம் ₹2000-ஆக உயர்வா?

image

மாணவ, மாணவிகளுக்கு மாதம் ₹1000-ஐ TN அரசு வழங்கி வருகிறது. இந்த தொகையை ₹2000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசிய மாணவர் ஒருவர், ₹1000 போதவில்லை, உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்க, உடனே கைதட்டி சிரித்துக் கொண்டே CM ஸ்டாலின் வரவேற்றார். தேர்தலுக்கு முன், இதுபற்றி அறிவிப்பு வெளியாகலாம்.

News September 26, 2025

ராமதாசுக்கு கொலை மிரட்டல்: MLA அருள்

image

ராமதாஸை கொலை செய்யவேண்டும் என்ற நிலைக்கு அன்புமணி ஆதரவாளர்கள் வந்துவிட்டதாக MLA அருள் குற்றம்சாட்டியுள்ளார். சில சமூகவலைதள பக்கங்களை காட்டி இப்புகாரை வைத்த அவர், ஏற்கெனவே ஒட்டுக்கேட்பு கருவி குறித்து போலீசிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறினார். எனவே மீண்டும் புகாரளிக்க உள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

News September 26, 2025

EPS-ஐ மன்னித்துவிடலாம்: செல்வப்பெருந்தகை

image

பிச்சைக்காரர் போட்டிருக்கும் ஒட்டு போட்ட சட்டை போல பல கட்சிகளுக்கு சென்று வந்தவர் செல்வப்பெருந்தகை என்று EPS விமர்சித்திருந்தார். இந்நிலையில், வன்மமான கருத்து என கூறியுள்ள செல்வப்பெருந்தகை, EPS-க்கு வயதாகிவிட்டதால் மன்னித்து விடலாம் என பதிலளித்துள்ளார். மேலும், EPS-க்கு அரசியல் செய்ய தெரியவில்லை என்றும், காங்., தலைவர்களிடம் அரசியல் செய்ய கற்றுக் கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!