News September 26, 2025
செரிமானம் மேம்பட இந்த யோகாவை பண்ணுங்க!

வயிற்று தசைகளை இறுக்கி, செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, வாயு தொல்லையை நீக்க பவன முக்தாசனம் உதவும் ✱கால்களை நீட்டி விரிப்பில் படுக்கவும் ✱2 கால்களையும் மடித்து, தொடைப் பகுதியை மார்போடு சேர்த்து வைக்கவும் ✱2 கைகளால் காலை இறுக்கமாக பிடிக்கவும் ✱தலையை உயர்த்தி, நெற்றி கால் முட்டியை தொடும்படி வைக்கவும் ✱இந்த நிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE.
Similar News
News September 26, 2025
7 நாள்களுக்கும் ஹெல்தியான லஞ்ச் லிஸ்ட் ரெடி

‘மத்தியானம் ஃபுல் கட்டு கட்டுறோம்’ என்ற பேச்சு இன்றும் நம்மிடம் இருக்கிறது என்றால், மதிய உணவு மீதான அலாதி பிரியமே காரணம். அதற்காக மணக்க மணக்க பிரியாணியை மட்டுமே எப்போதும் சாப்பிட விடமுடியாது. எனவே, நமது ஊருக்கு ஏற்றதுபோல், சிறந்த, எளிதான மற்றும் சத்தான மதிய உணவு வகைகளை மேலே கொடுத்துள்ளோம். அதை swipe செய்து பார்த்துவிட்டு, உங்களுக்கு பிடித்ததை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News September 26, 2025
அரசு நிகழ்ச்சியா? பாடல் வெளியீட்டு விழாவா?

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற அரசு நிகழ்ச்சி பாடல் வெளியீட்டு விழா போல இருந்தது என சீமான் விமர்சித்துள்ளார். 2,500 பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்துவதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பட்டப்படிப்பு முடித்து வரும் இளைஞர்களுக்கு தாய் மொழியில் எழுதத் தெரியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News September 26, 2025
இப்போதான் 4G’யே வரீங்களா.. BSNL மீது கடும் விமர்சனம்!

நாளை முதல் இந்தியா முழுவதும் 4G சேவையை வழங்கவுள்ளதாக BSNL அறிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற டெலிகாம் நெட்வொர்க்குகள் விரைவில் 6G கொண்டுவந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘நீங்க ரொம்ப Slow BSNL’ என பயனர்களிடம் இருந்து கடும் விமர்சனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?